உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு – மேலதிக குறுக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு…

கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் சட்ட விரோதமான முறையில் 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று(30) விசாரணைக்கு வந்தது.

இதன்பேது அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகேயின் நெறிப்படுத்தலில் பொஸ்டன் கெப்பிடல் எனும் நிறுவனத்தின் தலைவரிடம் சாட்சி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், பிரதிவாதி சார்பான சட்டத்தரணியால் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த இந்த குறுக்கு விசாரணையின் போது, முன்னதாக இரகசியப் பொலிஸாருக்கு வழங்கிய 05 வாக்குமூலங்களில் இரண்டு பொய்யானது என சாட்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து மேலதிக குறுக்கு விசாரணை நடவடிக்கை நாளை(31) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

விமானப் படையின் 66 வது ஆண்டு களியாட்டம் விழா நாளை ஆரம்பம்… [VIDEO]

wpengine

வவுனியா தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

கலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொலிசாருக்கு அதிகாரம்…

wpengine