உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பொலிசில் ஆஜராகுமாறு அழைப்பு..

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றும்(10) பொலிசுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(09) பொலிசுக்கு சமூகமளித்த நாமல் ராஜபக்ஷ இன்று(10) ஆஜராக முடியாது எனவும், இதற்கு பகரமாக வேறு ஒரு தினத்தை 25 ஆம் திகதியின் பின்னர் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இருப்பினும், இவரது கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இன்று(10) மாலை 5 மணிக்கு ஹம்பாந்தோட்ட பொலிசில் ஆஜராகுமாறு அவர் கேட்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 05 வான்கதவுகள் திறப்பு

wpengine

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

wpengine

நாடு முழுவதும் இன்று சீரான வானிலை

wpengine