உள்நாட்டு செய்திகள்

நாமல் FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்குச் சொந்தமான சட்ட நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம்  பெறுவதற்காகவே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சட்ட நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று குறித்த பிரிவினரின் அதிகாரிகள் தெரிவித்தனர். எவன்கார்ட் பாதுகாப்புச் சேவையின் பணிப்பாளர் நிசாங்க சேனாதிபதியால், குறித்த சட்ட நிறுவனத்துக்கு 22 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த மே மாதம் 31ஆம் திகதி, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

ஊழியர்களின் உரிமைகளைப் கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

wpengine

ஐந்து மாகாணங்களுக்கு இன்று இடியுடன் கூடிய மழை..

wpengine

அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்க திறைசேரி அனுமதி

wpengine