உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா வைரஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அங்கு நேற்று ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது.

உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதால் இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் லண்டனில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இதனால் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 

Related posts

ஈராக்கின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று பொதுவாக்கெடுப்பு..

wpengine

கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஏவுகணை சோதனை..

wpengine

ஐ.எஸ் தீவிரவாதிகளால் பாலியல் கொடுமைக்கு ஆளானேன் – யாஸிதி பெண் (VIDEO)

wpengine