உள்நாட்டு செய்திகள்

நாளை புத்தளம் ரயில் பாதையில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

கட்டுநாயக்க – குரண ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் பாதை சீர்திருத்தப் பணிகள் இடம்பெறுவதனால் நாளை(10) புத்தளம் ரயில் பாதையில் பயணிக்கும் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, வழமையான 03 ரயில் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஏனைய ரயில்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதிகாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கி செல்லும் ரயில், காலை 9.50 மணிக்கு நூர் நகரிலிருந்து ஆரம்பித்து கொழும்பு கோட்டை செல்லும் ரயில், அதிகாலை 3.50 மணிக்கு சிலாபத்திலிருந்து மருதானை வரை செல்லும் ரயில் என்பவற்றின் பயணங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, காலை 4.50 மணிக்கு சிலாபம் ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பித்து காலை 7.37 மணிக்கு மருதானை வரையில் பயணிக்கும் ரயில் வழமைக்கு மாற்றமாக காலை 5.35 மணிக்கு சிலாபத்திலிருந்து புறப்படவுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்ந்தும் ஆர்.சம்பந்தனுக்கு…

wpengine

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

wpengine

பாரவூர்தி விபத்து – மலைநாட்டு புகையிரத சேவையில் தாமதம்

wpengine