உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளில் நாளை(05) விசேட சோதனை நடவடிக்கை…

(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் 06 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நாட்டிலுள்ள பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி, கொழும்பிலுள்ள பாடசாலைகளில் நாளை(05) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாளை(05) பிற்பகல் 01 மணிக்கு பின்னர், பாடசாலை வளாகங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பித்த பின்னர் பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது.

Related posts

எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine

சீமெந்தின் விலை குறைக்கப்பட்டது – இன்று முதல் அமுல்..!

wpengine

நாடு முடக்கத்திற்கு தயாராகிறது – அரச மருத்து அதிகாரிகள் சங்கம்

wpengine