உள்நாட்டு செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவிடமிருந்து பிரசன்னவுக்கு அழைப்பாணை

மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நாளை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மற்றும் 03 பேர் இணைந்து நடத்தும் தனியார் வியாபாரத்தின் ஒரு பங்குதாரரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே இவ்வலைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மேல் மாகாண முதலமைச்சரின் மனைவியான மோரின் ரணதுங்கவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பில் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்களை கைது செய்து அவரது தேர்தல் வியாபாரங்களை வலுவிழக்க செய்ய முயற்சிப்பதாக பிரசன்ன ரணதுங்க இவ் அழைப்பிற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஒரு கட்டமாக தன்னை கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொள்ளவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் நாளை காலை 09 மணியளவில் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(riz)

Related posts

தடுப்பூசிகளை தெரிவு செய்யாதீர்கள்

wpengine

அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில்

wpengine

இலங்கை மத்திய வங்கியின் 2016ம் ஆண்டு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..

wpengine