உள்நாட்டு செய்திகள்

நிமல் போப்பகேயினது பதவி தொடரும் – ஜனாதிபதி

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகேயை பதவியில் இருந்து அகற்றாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் தரப்பு அணியினரை ஊடகங்கள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று கூறுவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு ஊடகங்களுக்கு எச்சரிக்கை தொனியில் போப்பகே அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை அழைத்து எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் அமைச்சரின் பணிப்புக்கிணங்க செயற்படப் போவதாக அவர் உறுதியளித்திருந்தார்.

இதேவேளை அவரை பதவியில் இருந்து அகற்றப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும்  அவரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரு கோடி பெறுமதியான தங்க நகைகளுடன் இருவர் கைது…

wpengine

சஜித் : ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்

wpengine

இலங்கை எரிபொருள் கேந்திரங்களைக் குறிவைக்கிறதா இந்தியா..

wpengine