உள்நாட்டு செய்திகள்

நிலக்கரி கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திரம் நடைமுறைக்கு..

நிலக்கரி கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திர (டென்டர்) நடைமுறைகளை ஒழுங்குபடுத்தியுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நிலக்கரி விற்பனை செய்வது தொடர்பில் தகுதியுடைய வழங்குனர்களை பதிவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொட குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது 17 பேரே இவ்வாறு பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவர்களிடம் இருந்து மட்டுமே விலை யோசனையை கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளாக கேள்விப்பத்திர முறை இன்றியே நிலக்கரி கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் 2015, 2016ம் ஆண்டு கேள்விப்பத்திரம் விடப்படும் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்துள்ளதாகவும் படகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதான பாதையிலான ரயில்வே சேவைகளில் தாமதம்…

wpengine

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது….

wpengine

பம்பலபிட்டி வர்த்தகர் கடத்தல் விவரங்களை வழங்கினால் சன்மானம், கடத்தியவர்களால் 2 கோடி கப்பம் கோரப்படுகிறது..

wpengine