உள்நாட்டு செய்திகள்

நிலக்கரி மோசடி தொடர்பான அறிக்கையானது இன்று பிரதமரிடம் கையளிப்பு.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலக்கரி மோசடி தொடர்பான அறிக்கையானது இன்று பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிலக்கரி மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையே இன்று பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குழுவானது மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவினால் நியமிக்கப்பட்டது சுட்டிகாட்டத்தக்கது.

மேலும் குறித்த அறிக்கை பிரதமரைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கும், ஊடகங்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

wpengine

முடிவுகளுக்காய் ஐ.தே.செயற்குழு நாளை சிறிகொத்தவில் கூடுகின்றது

wpengine

அத்தியாவசியமற்றவைக்கு இறக்குமதி வரையறை நீக்கம்

wpengine