உலக செய்திகள்

நிலவின் இருண்ட பக்கம்: படம் பிடித்த நாசா செயற்கைக்கோள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயற்கைக்கோள் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலவின் இருண்ட பக்கத்தை படம்பிடித்துள்ளது.

நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி’ செயற்கைக்கோள், 10 லட்சம் மைல் தூரத்தில் இருந்துகொண்டு இந்த அபூர்வ புகைப்படத்தை எடுத்துள்ளது.

பூமியை கடந்து நிலவு நகர்ந்து செல்லும்போது இந்த அரிய புகைப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையை மேற்கொள்ள, அந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருக்கும் ‘எர்த் பாலிக்ரோமேடிக் இமேஜிங் கமெரா’ முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் நிலவைச் சுற்றி வரும் போது ஆண்டுக்கு இரண்டு முறை நிலவு மற்றும் பூமி இரண்டையும் ஒரே சமயத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பிவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தென் கொரியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா

wpengine

ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு…

wpengine

ஜப்பானில் 107 விமானங்கள் இரத்து…

wpengine