உள்நாட்டு செய்திகள்

நீதிமன்றங்களில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்.

பிராந்திய நீதிமன்றங்களில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

கொழும்புக்கு வெளியில் அமைந்திருக்கும் பல நீதிமன்றங்கள் வசதிகள் இல்லாமல் பழைய கட்டிடங்களுடன் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றன.

இதன் காரணமாகவே நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைப்பது தொடர்பில் விஜயதாஸ மூலம் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டது.

கம்பளை, ருவன்வெல்ல, முல்லைத்தீவு மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

உத்தியோகபூர்வதாக அறிவிப்பு வெளியானது

wpengine

இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை…

wpengine

பெற்றோல் கிடைக்கப் பெறாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கோரிக்கை..

wpengine