உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பில் கொலை – 18 வயதுடைய ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | நீர்கொழும்பு) – நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றில் சந்தேகநபர் ஒருவர் இன்று(10) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, பெரியமுல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, நால்வர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

Azeem Kilabdeen

UPDATE – குசல் மற்றும் அசேல பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களை தடுமாற வைகிறார்களா…

wpengine

GSP ப்ளஸ் வரிச்சலுகையை இலங்கை நெருங்கி விட்டது – ஐரோப்பிய ஒன்றியம்..

wpengine