உள்நாட்டு செய்திகள்

நீர் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் – நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு..

ஐந்து வருட காலத்திற்குள் நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாததன் காரணமாக, விரைவில் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மாத்தறை நீர் வளங்கள் திட்டத்தின் நான்காவது கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று(07) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீர் கட்டணத் திருத்தமானது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அது நடைபெறாத நிலையில் ஐந்து வருடங்களாக நீர் கட்டண திருத்தம் நடைபெறவில்லை.

அதன் காரணமாக உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் நாட்டின் பல பிரதேசங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக கட்டண அதிகரிப்பில் தாமதத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதியின் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

(rizmira)

Related posts

சமூக ஊடக வலையமைப்புக்களை அடக்க முடியாது – ஊடகப் பிரதி அமைச்சர்

wpengine

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி

wpengine

விமான நிலையம் மீண்டும் திறப்பு

wpengine