உள்நாட்டு செய்திகள்

நீர் விநியோகம் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் சில பகுதிகளில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் முழுமையாக வழமைக்கு திரும்ப மேலும் சில மணித்தியாலங்கள் செல்லும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை திருத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இன்று(27) நண்பகல் 12 மணியளவில் நீர் விநியோகம் ஓரளவு வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல், 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முன்னர் தெரிவித்திருந்தது.

அதன்படி, கொழும்பு, கோட்டே, கடுவலை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை இன்று…

wpengine

ஆரம்ப பாடசாலை கல்வியை அரசு பொறுப்பேற்கும்..

wpengine

அக்மீமன பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் தவறு செய்யவில்லை

wpengine