உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பவியலாளர்கள் கோளாறினை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2 ஆவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் 3 ஆவது தொகுதி தொடர்ந்து இயங்கிவருகிறது.

மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் (West coast) மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து நாடாளுமன்ற விவாதத்திற்கு கோரிக்கை…

wpengine

நாவலை பகுதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்றில் தீ…

wpengine

பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை – பிரசன்ன ரணதுங்க..!

wpengine