உள்நாட்டு செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது…

கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்றிரவு(11) கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீனவர்களின் 5 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று(12) யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

TIK TOK இளைஞனை தேடி ஹட்டன் சென்ற முல்லைத்தீவு சிறுமி

wpengine

பம்பலபிட்டிய கோடீஸ்வர வர்த்தகர் சடலமாக மீட்பு.. VIDEO (Update)

wpengine