உள்நாட்டு செய்திகள்

‘நெதுன்கமுவ ராஜா’ யானை உயிரிழந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி – எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்து சென்ற நெதுன்கமுவ ராஜா என்ற யானை 69 வயதில் மரணித்துள்ளது.

குறித்த யானை இன்று அதிகாலை 5.30 அளவில் மரணித்ததாக அதன் பராமரிப்பாளர் வைத்தியர் ஹர்ச தர்மவிஜய தெரிவித்துள்ளார்.

1953ஆம் ஆண்டு இந்தியாவின் – மனிப்பூரில் பிறந்த நெதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்டதாகும்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், இந்த யானை கண்டி – எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘ஆதரனிய கதாவ’ சகோதர மொழித் திரைப்படத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

wpengine

மஹிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்…

wpengine

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி இராஜினாமா

wpengine