உலக செய்திகள்

நைஜீரியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

நைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இவ்வியக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்து வருகிறது.

நேற்று வடகிழக்கு நைஜீரியாவின் சொபான் கரி என்ற நகரத்தின் மதியம் சுமார் 1.30 மணியளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சந்தையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 52 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு போகோஹரம் பொறுப்பு ஏற்கவில்லை என்றாலும், குண்டு வெடிப்பு நடந்த பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று என்பதால் இத்தாக்குதலை அவர்கள்தான் நடத்தியிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

(riz)

 

Related posts

பிக்பென் கடிகாரம் நான்கு ஆண்டுகள் இயங்காது..

wpengine

உக்ரைனுக்கு $24 பில்லியன் இராணுவ உதவி

Azeem Kilabdeen

காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது குண்டுவீச்சு…

wpengine