உலக செய்திகள்

எரிவாயு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து – 35 பேர் உயிரிழப்பு…

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில் 35 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருகே உள்ள சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் இந்த திடீர் விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், மேலும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நைஜீரிய செனட் அதிபர் புகோலா சராகி, இது ஒரு எதிர்பாராத கொடூரமான நிகழ்வு என தெரிவித்துள்ளார்.

நைஜீரிய நகரங்களில் உள்ள பெரும்பாலான எரிவாயு கிடங்குகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபடாத காரணத்தால் அங்கு அடிக்கடி இதுபோன்ற திடீர் விபத்துகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

Related posts

புளோரிடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு…

wpengine

இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் சிக்கிய நாடுகள்

wpengine

கலைக்கப்பட்ட கட்டாலோனியா பாராளுமன்றத்திற்கு இன்று மறுதேர்தல்…

wpengine