விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் சந்திமால் புதிய சாதனை…

 

பங்களாதேஷ் அணிக்கு எதிராக 500 ஓட்டங்கள் இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்களுள் நடுத்தர திறமையான துடுப்பாட்டாளர் வரிசையில் தினேஷ் சந்திமால் ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளார். அது நேற்று(15) இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை பெற்றதாலேயே ஆகும்.

நேற்றைய போட்டியுடன் சந்திமால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடும் 6வது டெஸ்ட் போட்டியாகும். 6 போட்டிகளிலும் அவர் 526 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதில் 3 சதங்களையும் 2 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.

கொழும்பில் பி.சரவனன்முத்து மைதானத்தில் இடம்பெற்று வரும் குறித்த போட்டியில் நேற்றைய தின ஆட்டம் நிறைவடையும் போது தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி 7 விக்கட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

T20 உலககிண்ணம் – ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் வெற்றி

wpengine

நயாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

wpengine

மே.தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான ரசல்க்கு போட்டித்தடை விதிக்க அதிக வாய்ப்பு

wpengine