உள்நாட்டு செய்திகள்

பசிலுக்கு கட்சியின் அமைப்பாளராக வருவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு – ஐ.ம.சு.மு

பசில் ராஜபக்ஷவுக்கு தேவையானால் அமைப்பாளராவதற்கு விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். அவரை நேர் முகப் பரீட்சையொன்றுக்கு உட்படுத்தியதன் பின்னரே மத்திய செயற்குழு தீர்மானம் எடுக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அமைப்பாளர் பதவியொன்றை வழங்க முடியும் அல்லவா? ஏனெனில், அவருக்கும் முறைப்பாடு மட்டுமே உள்ளன. அது குறித்து இதுவரை தீர்ப்பளிக்கப்படவில்லை அல்லவா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சஜின் வாஸ் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்தும், தற்பொழுது அரசாங்கம் அவரை அருகில் வைத்துள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு, அமைச்சர் பதிலளிக்கையில்,

குற்றச்சாட்டுக்கள் யார் மீது தான் இல்லை. அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லையே என குறிப்பிட்டார். இந்தக் கருத்தை வைத்துக் கொண்டே ஊடகவியலாளர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் வினாவைத் தொடுத்துள்ளார்.

Related posts

வரவு செலவு திட்டத்திற்கு முன்பு எமது கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கினால் மாத்திரமே நாங்கள் ஆதரவளிப்போம் – பொதுஜன பெரமுன ரணிலுக்கு அறிவிப்பு..!

wpengine

உருமாறிய கொரோனா : ஆய்வின் பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்படும்

wpengine

டிகிரி யானை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு

wpengine