உள்நாட்டு செய்திகள்

பட்டாசுகளுடன் காத்திருக்கும் மக்கள்! மஹிந்தவிற்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) மரணிக்கும் வரையில் சிலர் பட்டாசுகளுடன் காத்திருப்பது மிகவும் ஓர் துர்ப்பாக்கிய நிலை என முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க (Wimalaweera Dissanayake) தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர்கள் பிரபாகரனை கொன்ற போது அன்று பாற்சோறு சமைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடிய சிலர் இன்று மஹிந்த மரணிக்கும் வரையில் பட்டாசுகளுடன் காத்திருக்கும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாகவே இந்த நாட்டில் மீளவும் பிறக்க கூடாது என பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபகக்ஷவிடம் குறைகள் காணப்பட்டாலும் இந்த நாட்டின் தீர்மானமிக்க சேவைகளை ஆற்றிய வரலாற்று ஆளுமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் தலைவர் மரணிக்கும் வரையில் காத்திருப்பது மிகவும் துயரமான ஓர் நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்கள் அன்றி விலங்குகள் இறந்தாலும் கொண்டாடி மகிழும் பழக்கம் தன்னிடமில்லை. பிரபாகரன் உயிரிழந்த தினத்தில் பலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடிய போதும் தாம் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரின் மரணத்தை கொண்டாடுவது நல்ல பண்பு கிடையாது. மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் உரையாடியதாகவும், அவர் நல்ல சுகமாக இருக்கின்றார் எனவும் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 வரை ஒத்திவைப்பு…

wpengine

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண ஆளுனர்

wpengine