உள்நாட்டு செய்திகள்

பணம் இல்லாமல் தேசிய அடையாள அட்டை பெறலாம்.

புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ஆட்பதிவு திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளதென திணைக்கள அலுவலளர்கள் தெரிவித்தனர்.

முதலில், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 3 ரூபாவிலிருந்து 100 ரூபாய் வரை அதிகரிக்கவும் அடையாள அட்டையிலுள்ள தகவல்களை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 1,000ரூபாவாக அதிகரிக்கவும்திணைக்களம் தீர்மானித்திருந்தது.

தொலைந்த அல்லது பழுதடைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 15ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கப்படவிருந்தது.

தேர்தல் தருணத்தில் இவ்வாறாக கட்டணங்களை அதிகரிக்க வேண்டாமென தேர்தல்கள் ஆணையாளர் உட்பட பல தரப்பினரிடமிருந்து ஆட்பதிவு திணைக்களத்துக்கு வேண்டுகோள் கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார கூறினார்.

Related posts

வைத்தியரின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளின் ஊடாக விசாரணை

Azeem Kilabdeen

பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது [VIDEO]

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறித்த செயலாளரின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – ஊடகத்துறை அமைச்சர்

wpengine