உள்நாட்டு செய்திகள்

பண்டாரவளை – திக்கராவை பகுதியில் மண்சரிவு அபாயம் சுமார் 150 குடும்பங்கள்  வௌியேறும்படி பணிப்பு

பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக  பண்டாரவளை திக்கராவை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகமைத்துவ பதுளை கிளை அறிவித்து, 150 குடும்பங்களை உடனடியாக வெளியேறும்படி வேண்டிக்கொண்டது .
ஆனால் நேற்று இரவு 9 மணியளவில் 26 குடும்பங்கள் மட்டும் அவ்வேண்டுகோளை ஏற்று பண்டாரவளை பிந்துனுவெவ இளைஞர் படையணி கட்டிட தொகுதிக்கு  தற்காலிகமாக இடம்பெயர்ந்தது. ஏனைய குடும்பங்கள் இடம்பெயர மறுத்து எதிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. நேற்று இரவு ஒன்பது 11 மணியலவில் இடம்பெயர்ந்தவர்களில் சிலர்  தமது குடியிருப்புகளுக்கு மீண்டும்  திரும்பியுள்ளனர்.
கடும் மழை மாத்திரம் அன்றி    உமாஓயா அபிவிருத்தி திட்டத்தின் விளைவாக நிலத்தில் ஏற்பட்ட வெடிப்புகளில் இருந்து நீர் வெளியேறியதால் மண் சரிவை எதிர்பார்த்த அனர்த்த முகமைதுவ நிலையம் இடம்பெயரும்படி சுமார் 150 குடும்பங்களிடம் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது .

 

Related posts

சவூதி இளவரசர்களில் ஒருவர் இன்று இலங்கைக்கு விஜயம்..

wpengine

பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க முதலில் ஐ.தே.கட்சியினரே உதவியது – ரஞ்சன்…

wpengine

நோர்வே பிரதமர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு இலங்கைக்கு விஜயம்.

wpengine