உள்நாட்டு செய்திகள்

பதிவு செய்யாத ‘சிம்’ அட்டைகள் குறித்து விசேட அவதானம்.. உரிய முறையில் பதிவு செய்வது கட்டாயம்..

உரிய முறையில் ‘சிம்’ அட்டைகளை புகைப்படத்துடன் பதிவு செய்வதற்கான முறையினை பின்பற்றுமாறும் குறித்த செயன்முறையினை செயற்படுத்தும் அதிகார சபை அதிகாரத்தினை இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஒப்படைப்பதற்கும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிம் (Subscriber Identification Module – SIM) அட்டைகளை பயன்படுத்தி இன்று பல்வேறு குற்றச்சாட்டுகளும், மோசடிகளும் இடம் பெறுவதாக இணங்காணப்பட்டுள்ளதுடன், அதனடிப்படையில் உரிய முறையில் சிம் அட்டைகளை புகைப்படத்துடன் பதிவு செய்வதற்கான முறையினை பின்பற்றுமாறும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் கையடக்கத் தொலைப்பேசி சேவை வழங்குனர்களிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியினை முறையாக மேற்கொள்வதற்காக 1991ம் ஆண்டு 25ம் இலக்க இலங்கை தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரின் மூலம் வேண்டுகோள் விடுப்பதற்கும் குறித்த செயன்முறையினை செயற்படுத்தும் அதிகார சபை அதிகாரத்தினை இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஒப்படைப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

(rizmira)

Related posts

பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

wpengine

21ம் திகதியன்று முன்னெடுக்க இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine

உதயங்கவை தாய்லாந்தில் மஹிந்த சந்தித்தது ஏன்?

wpengine