உள்நாட்டு செய்திகள்

பந்துல குணவர்தனவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று அழைப்பு..

ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தனவை வாக்குமூலம் ஒன்றினை வழங்க சமுகமளிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய லொத்தர் சபை, நிதியமைச்சின் கீழே இருக்க வேண்டும் என்றாலும், குறித்த சபையானது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்தமை தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்கே, அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நிதியமைச்சின் கீழிருக்க வேண்டிய லொத்தர் சபையானது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் அவர், மனுத்தாக்கல் செய்துள்ள நிலையிலேயே, வாக்குமூலமளிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன தெரிவிக்கையில்;

“..வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு, இன்று(15) வருமாறு, அத்திணைக்களத்தின் அதிகாரிகள் என்னை அழைத்தனர். எனினும், வாக்குமூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், என்னுடைய வீட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டேன்” என்று பந்துல தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

News Editor

விபத்துக்குள்ளான ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப் பிரச்சாரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine