Top Story 1உள்நாட்டு செய்திகள்

பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி ரூ.50 இலிருந்து ரூ.20 ஆக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருமான இழப்பு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி பந்துல குணவர்தன அன்றைய காலப்பகுதியில் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தம்…

wpengine

பிணை முறி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மீளவும் நிதி அமைச்சின் செயலாளர்…

wpengine

ரிஷாத் சபைக்கு வர அனுமதி

wpengine