உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டியில் நடமாடும் விபச்சார நிலையம் – நால்வர் கைது.

வான் ஒன்றைப் பயன்படுத்தி  நடத்திச் செல்லப்பட்ட நடமாடும் விபசார நிலையம், கொழும்பு பம்பலபிட்டியில் வைத்து  ​பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

எமில்டா வீதிக்கு  அருகில் வைத்து, விபசாரத்தில் ஈடுபட்ட  மூன்று பெண்களும்  ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

23, 27, மற்றும் 28 வயதுடைய பெண்களே  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆண் 36 வயதுடையவர் எனவும் கொழும்பில் வசித்து வருபவர் என பொலிஸார் கூறினர். சந்தேகநகர்கள் நால்வரையும் கொழும்பு புதுக்கடை 3ஆம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

ஆறு மணித்தியாலத்தில் 343 பேர் கைது

wpengine

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் முன்னணியினர் சபாநாயகருக்கு கடிதம்..

wpengine