உலக செய்திகள்

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது..

(FASTNEWS | PAKISTAN) – தனது மண்ணிலோ, உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள சாச்ரோ நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றுகையில்;

தனது மண்ணிலோ, அல்லது உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. தற்போது இருப்பது புதிய பாகிஸ்தான். எங்கள் நாட்டில் முதலீட்டையே நாங்கள் விரும்புகிறோம்.

நமது புதிய பாகிஸ்தான் வளமுடனும், ஸ்திரதன்மையுடனும், அமைதியுடனும் திகழ வேண்டும். சர்வதேச சமூதாயத்தில் ஒரு பொறுப்புள்ள நாடாக திகழ பாகிஸ்தான் விரும்புகிறது. எனவே இங்கு எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்தையும் அனுமதிக்க மாட்டோம். என தெரிவித்துள்ளார்.

Related posts

துருக்கியின் கிரீக் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்..

wpengine

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த துருக்கி பெண்ணுக்கு ஈராக்கில் மரண தண்டனை…

wpengine

குற்றவாளியானார் டிரம்ப் – 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் உத்தரவு

wpengine