Top Story 3உள்நாட்டு செய்திகள்

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்ததன் காரணமாக மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதேவேளை, தற்போதைய நடமாட்டக்கட்டுப்பாடு தளர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 19ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பட்டதாரிகளின் நியமனப் பட்டியல் வெளியானது

wpengine

மஹிந்தவுடன் எம்.பி.க்கள் சிலருக்கு அழைப்பாணை

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசுக்கு எதிரான பேரணி ஒத்திவைப்பு…

wpengine