உலக செய்திகள்

பயணிகள் விமானப் போக்குவரத்து : ஜூன் 30 வரை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – கொரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்தபோதும் அத்தடை நீக்கப்படவில்லை.

கடந்த மாா்ச்சில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது. அதே வேளையில், ஏா் பபுள் விதிகளைக் கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இத்தகைய சூழலில் உலக அளவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அதே வேளையில், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ஏா் பபுள் விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி

wpengine

சிங்கப்பூரில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலுக்கு

wpengine

மன்மோகன் சிங் மறைவு – முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

Azeem Kilabdeen