உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பரீட்சைக்கு தோற்றும் ரஞ்சன் ராமநாயக்க!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை இறுதியாண்டு இறுதிப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இத்தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் ஊடகங்கள்) தெரிவித்தார்.

திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்குத் தேவையான வசதிகளை ரஞசன் ராமறாயக்க கோரியபோது, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், அதற்கு தேவையான வசதிகளை வழங்கினார்.

இந்நிலையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக ரஞ்சன் ராமநாயக்க பரீட்சையில் தோற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சந்தநாயக்க ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்

Related posts

ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய 261 இலங்கையர்கள்

wpengine

ஓய்வுபெற்ற பின்னரும் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ இல்லம்

wpengine

10 லட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் வைத்திய சங்கம்

wpengine