Top Story 3உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழகங்களை மீளவும் திறக்க எதிர்பார்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாயின், எதிர்வரும் நவம்பர் மாதம் பல்கலைக்கழகங்களை மீள திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல வருடங்களுக்கு பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு 42,000 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதாகவும் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

wpengine

MV Xpress pearl கப்பலின் கெப்டன் கைது

wpengine

UPDATE – ஊனமுற்ற படைவீரர்களது ஆர்ப்பாட்டத்தினால் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

wpengine