Top Story 3உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2024ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை 2024-2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசிய பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 2025ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் விண்ணப்பத்தை ஒன்லைனில் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் – அமெரிக்கா…

wpengine

யாசகர்கள் மற்றும் மாடுகளுக்கு கொழும்பில் தடை – அமைச்சர் சம்பிக்க

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியில் நாளை பொன்சேகாவிற்கு பிரதி தலைவர் பதவி…

wpengine