உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

வடமாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில், குறிப்பாக ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், கேகாலை, அவிசாவளை, மாதுறு ஓயா ,பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் பலமான காற்று வீசக்கூடும்.

யாழ் மாவட்டத்தின் சில இடங்களில் மணிக்கு சுமார் 50mm கனமழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(16) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு , தெற்கு , சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்யலாம்.

திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னலிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பிரதமரின் நத்தார் நல்வாழ்த்துக்கள்

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட மாட்டாது – ஜனாதிபதி

wpengine