உலக செய்திகள்

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழப்பு…

பெரு நாட்டின் தலைநகர் லீமா அருகே சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசமாயோ நகரில் இருந்து ஒரு பேருந்து 57 பயணிகளுடன் லீமா நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஒரு ஆபத்தான வளைவில் எதிரே வந்த லொறி மீது மோதியது. இந்த விபத்தில் சுரித்த பேருந்து சாலையை ஒட்டி இருந்த சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

பள்ளத்தில் இருந்து மக்களை மீட்பது கடினமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடைமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

2015ம் ஆண்டில் அதிகளவில் பொய் பேசிய அரசியல்வாதிக்கான விருது – பிரான்ஸ் தலைவர் மரீன்

wpengine

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மறுமணம் செய்ததாக பரபரப்பு

wpengine

வடகொரியா இராணுவ அணிவகுப்பில் உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம்

wpengine