உள்நாட்டு செய்திகள்

பஸ்களிலுள்ள இனவாத சுவரொட்டிகளை அகற்ற ஒரு வாரகாலம் அவகாசம்

இனவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் சட்டப்படி பஸ் உரிமையாளர்கள், இவ்வாறான சுவரொட்டிகளை தமது பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கக்கூடாது என்று கெமுனு மேலும் கோரியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் அரசியல் சுவரொட்டிகளை பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் தனியார் பஸ்களில் சகல இனத்தவரும் பயணம் செய்யும் போது அவர்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய சுவரொட்டிகளுக்கு இடம்தர முடியாது என்றும் கெமுனு தெரிவித்துள்ளார்.

Related posts

தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு

wpengine

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்..

wpengine

கம்மன்பிலவிற்கு நவம்பர் மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை.

wpengine