உள்நாட்டு செய்திகள்

பஸ் சில்லில் சிக்கி இளம் நடத்துநர் பலி..

பாணந்துறை ​நகரத்தில் தனியார் பஸ்ஸின் அடிப்பகுதியில் சிக்கி, அந்த பஸ்ஸின் நடத்துநர் பலியாகியுள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சர்சையான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆபத்தை தவிர்க்க பஸ் சாரதி நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் சிலரால், சாரதி மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலையையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நடத்துநர் மீதும் குறித்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், நடத்துநரை பஸ்ஸின் ​அடியில் போட்டுள்ளனர். அதனை அறியாத சாரதி, பஸ்ஸை செலுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Related posts

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு

wpengine

சஜித் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் (இலக்கம் உள்ளே)

wpengine