உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16பேருக்கு காயம்

கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தின் அருகில் இன்று காலை பஸ் மற்றும் ஜீப் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது பஸ் வண்டியில் பயணித்த 16 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்களில் 14 பேர் ஆண் பிள்ளைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(riz)

Related posts

நாளை முதல் காலநிலையில் மாற்றம்..

wpengine

தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

wpengine

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine