உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அணியினரது அறிவினை பார்த்து ஏளனமாய் சிரித்த ஆஸி வீரர்கள்…

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 443 ஓட்டங்கள் எடுத்தது, அடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 465 ஓட்டங்கள் எடுத்தது.

இதில் மூன்றாம் நாள் ஆட்டத்தை விளையாட துவங்கிய அவுஸ்திரேலியா அணிக்கு வார்னர் மற்றும் ரென்சாவ் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

அப்போது வார்னருக்கு பந்து வீசிய முகமது அமீர் பந்து துடுப்பில் பட்டு சென்றதாக அம்பயரிடம் டி.ஆர்.எஸ் ரிவீவ் கேட்டார்.

ரிவீவில் துடுப்புக்கும் பந்துக்கும் இடையே அரை அடி பெரிய இடைவேளியில் பந்து சென்றது தெரியவந்தது. பாகிஸ்தானின் இந்த ரிவீவ் மிகவும் மோசமான ரிவீவாக கிரிக்கெட் வரலாற்றில் அமைந்துள்ளது.

இதைக் கண்ட அவுஸ்திரேலியா வீரர் வார்னர் கண் தெரியாதா என்று செய்கை செய்வது போல் பாகிஸ்தான் வீரர்களை கண்டு ஏளனமாக சிரித்துள்ளார்.

Pakistan with the worst review in the history of cricket. – Streamable

Related posts

அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவின் உறவினர் வீட்டில் மலையக சிறுமி சடலமாக மீட்பு

wpengine

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க கூடும்

wpengine

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

wpengine