உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான 11 இலட்சம் பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை…

பாடசாலை மாணவர்களுக்கான 11 இலட்சம் பாடப்புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடப்புத்தகங்களை அச்சிடும் அரச அச்சகம் மற்றும் தனியார் அச்சக உரிமையாளர்கள் உரிய காலத்தில் அச்சிடும் நடவடிக்கைகளை நிறைவு செய்யாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த தவணை நிறைவின் பின்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரத்திற்குள் நிலுவையில் உள்ள புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட அரச அச்சகம் மற்றும் தனியார் அச்சகங்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொவிட் 19 : நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

wpengine

சமூர்த்தி கொடுப்பனவு நிகழ்வு இன்று ஆரம்பம்..

wpengine

அன்டிஜன் பரிசோதனையில் 61 பேருக்கு கொரோனா உறுதி

wpengine