உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசிக்கு ஆலோசனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதினெட்டு வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பான பரிந்துரைகள் எதுவும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சினோவெக் மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசிகள் சில நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதனை இலங்கையிலும் அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பம்பலப்பிடிய ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்ததில் கடும் வாகன நெரிசல்..

wpengine

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு மீளவும் திறப்பு.. பொதுமக்கள் அவதானம்..

wpengine

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில்

wpengine