உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள்..!

யாழ்.நகர பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் நகரப் பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அதன் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த போதைப்பொருளை பாக்குடன் கலந்து சந்தேகநபர் அந்த போதைப்பொருளை சிறிய பிளாஸ்டிக் பையில் வைத்து யாழ்.நகரில் உள்ள பல பாடசாலை மாணவர்களுக்கு வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ் நகரை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

Related posts

அநுராதபுரம் டிப்போவை தற்காலிகமாக மூட தீர்மானம்

wpengine

சர்ச்சைக்குரிய பிணை முறி தொடர்பான 26 பக்கங்கள் கொண்ட அறிக்கை இன்று பாராளுமன்றில்..

wpengine

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

wpengine