உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாரவூர்தி விபத்து – மலைநாட்டு புகையிரத சேவையில் தாமதம்

பண்டாரவளை, கொலதென்ன புகையிரத பாதுகாப்பு கடவைக்கு  அருகில் பாரவூர்தியொன்று புகையிரத பாதையில் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் மலை நாட்டு புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இவ்வாறு விபத்துக்குள்ளான பாரவூர்தி கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இடத்தில் இடம்பெற்ற 50 ஆவது விபத்து இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதம், பண்டாரவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவு…

wpengine

நானோ நைட்ரஜன் 2ம் தொகுதி நாட்டுக்கு

wpengine

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

wpengine