உலக செய்திகள்

பாராளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்ட கூட்டத்தொடர் இன்று முதல் ஆரம்பம்..

மக்களவை தேர்தல் நெருங்கும், பரபரப்பான சூழலில் பாராளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்ட கூட்டத்தொடர் இன்று(31) காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது.

கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை காரணமாக வைத்து கூட்டத்தொடரை முடக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மேலும் இன்று முதல், எதிர்வரும் 13ஆம் திகதி வரை, வரவு – செலவுத்திட்ட கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தை நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நாளை(01) தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

சவூதி ஏர்லைன்ஸ் விமானம் SV 872 தீவிரவாதிகளின் பிடியில்..?

wpengine

மீண்டும் பரவும் இபோலா வைரஸ் – 17 பேர் பலி…

wpengine

நமது வேலைவாய்ப்புகளை இனியும் பிற எந்த நாட்டுக்கும் வழங்கத் தயாரில்லை -ட்ரம்ப் ஆவேசம்..

wpengine