உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அழைப்பு

(FASTNEWS | COLOMBO) – அரச பாடசாலைப் பாடப் புத்தகங்களில் அடிப்படைவாத கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கு இன்று(10) கல்வி அமைச்சின் செயலாளர் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(10) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ளது.

இன்றைய நாள் விசாரணைக்காக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து எந்தக்கவனமும் இல்லை – ஜனாதிபதி.

wpengine

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்

wpengine