உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தினை ஆளுங் கட்சியினர் வெளிநடப்பு செய்ய, விஜேதாச ராஜபக்ஷ அவையில் உரை…

பாராளுமன்றமானது ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், பெரும்பான்மை உள்ள குழுவொன்றுக்கு, சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றும் பாரளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில், இதற்கான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தான் தயாரென்றும் கூறினார்.

அத்துடன், இந்தப் பிரச்சினையை, சபாநாயகரால் மாத்திரமே முடிவுக்குக் கொண்டுவர முடியுமென்றும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதியும் பாரிய அர்ப்பணிப்பை நல்கினார் என்றும் 62 இலட்சம் மக்கள் அவருக்கு வழங்கிய நம்பிக்கையை வைத்துக்கொண்டு, அரசமைப்பைப் பின்பற்ற அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும், இது தொடர்பில், ஜனாதிபதியும் சபாநாயகரும், ஒன்றாக அமர்ந்து பேச வேண்டுமென்றும் கூறினார்.

மேலும், ஆளுங் கட்சி சார்பில் பாராளுமன்ற அமர்வானது வெளிநடப்பு செய்துள்ள வேளையில், அமைச்சர் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டாவறு தெரிவித்திருந்தார்.

Related posts

இவ்வாண்டு மின்சார சபையின் நட்டம் 89 பில்லியன் ரூபா

wpengine

வவுனியாவில் , சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு- அமைச்சர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு..

wpengine

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

wpengine