விசேட செய்தி

பாராளுமன்ற கலைப்புக்கு முன் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு  முன்னராக ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என அரசாங்கத் தகவல்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

19வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பின் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கும் அதிகாரம் அரசியல் அமைப்பு சபைக்கு உள்ளது.

அரசியல் அமைப்பு சபைக்கு 10 பேர் நியமிக்கப்படவுள்ளதுடன் அதில் 7 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் மூவர் தெரிவு செய்யப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நியமனங்களை செய்து முடிக்கும் பொருட்டு பாராளுமன்றம் எதிர்வரும் 3ம் திகதி விசேடமாக கூடவுள்ளது.

இதன்போது அரசியல் அமைப்பு சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நபர்களின் பெயர்களுக்கு அனுமதி கிடைத்தால் விரைவில் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விசேட விற்பனை வரி குறைப்பு

wpengine

UPDATE – சபாநாயகரின் பணிப்பினை புறக்கணித்து தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில்…

wpengine

எதிர்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு – சபாநாயகர்…

wpengine