ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாராளுமன்ற தகவல் கருமபீடம் இன்று முதல்

பாராளுமன்ற தகவல் கருமபீடம் இன்று முதல் காலை 09.30 தொடக்கம் 03.30 வரை, இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் வரை குறித்த கருமபீடம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான முக்கிய தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான உரிய ஆவணங்களை கொண்டு வருமாறு, தெரிவாகியுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாராளுமன்ற பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் விதமான www.parliament.lk என்ற இணையத்தளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்தி கொண்டு வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதால் அதற்கும் தயாராக வருமாறு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்பு..?

wpengine

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தலைவரின் தீர்மானம்…

wpengine

“ரதன தேரர் தான் கோட்டாபயவை அழித்தது, விவசாயத்தினை நாசம் செய்தது” – டயானா கமகே

wpengine